தேவையான பொருட்கள:-
மைதா மாவு -1 கப்
அரிசி மாவு -1 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு -1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்க்கு தேவையான அளவு
செய்முறை:-மைதா மாவை தண்ணீர் படாமல் ஓர் உலர்ந்த துணியில் கொட்டிக் கட்டி, ஆவியில் வேக வைக்கவும். வெந்த மாவை ஆற வைத்து சலித்து கொள்ளவும். அரிசி மாவையும் சலிக்கவும். மிளகு,சீரகத்தை கரகரப்பாக பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் மாவுவகைகள், மிளகுசீரகப்பொடி, உருக்கியநெய்,தேங்காய் துருவல்,உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திமாவு பதத்திற்க்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து பொரித்து எடுக்கவும். சுவையான மைதா சீடை தயார்.
nice
ReplyDelete