Friday, 13 July 2012

மசாலா பொடி

தேவையானவை;-
சீரகம்                        -1 கப்
சோம்பு                     -1 கப்
தனியா                     -1 கப்
மிளகு                        -1 டேபிள்ஸ்பூன்
லவங்கப் பட் டை-2 துண்டுகள்
ஏலக்காய்                - 5
கிராம்பு                     - 5
செய்முறை;- 
அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து மிஷினில் அல்லது மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும். இதை கூட்டு, பொரியல் செய்யும் பொழுது சேர்த்தால் மணமாகவும், சுவையாகவும்  இருக்கும்.

ரசப்பொடி (மிளகுப் பொடி)


 தேவையானவை;-
மிளகு                           - 1 கப்   
துவரப்பருப்பு            - 1 கப்
தனியா                        - 2 கப்
கடுகு                            - 1 கை பிடிஅளவு
வெந்தயம்                  - 1 கை பிடிஅளவு
சீரகம்                           - 1 கை பிடிஅளவு
பெருங்காயம்           - சிறிது
கறிவேப்பிலை        - சிறிது
செய்முறை;-
மிளகு,துவரப்பருப்பு ,தனியா ஆகியவற்றை  தனித்தனியாக வறுக்கவும். மற்றவையை ஒன்றாக வறுத்துக் கொள்ளவும்.எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து  பொடி செய்யவும்.

Thursday, 12 July 2012

மூலிகை சீயக்காய்த் தூள்

1. சீயக்காய்                               - 1/2 கிலோ       ( பிசுக்கை அகற்றுகிறது )
2 .பச்சைப்பயறு                       - 50 கிராம்        ( குளிர்ச்சியை அளிக்கிறது )
 3. ஆவாரம் பூ                           - 2 கைப்பிடி உலர்ந்தது.
( குளிர்ச்சியையும், கேசத்துக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது)    
4. உலர்ந்த ரோஜாப் பூ          - 10
  ( நறுமணம் கமழ வைக்கிறது 
5. கார்போக அரிசி                  - 10 கிராம்
( சொரி, சிரங்கு, பொடுகு வராமல். காக்கிறது )
6 .மருக்கொழுந்து  தவனம் - சிறிது ( இயற்கையில் இனிய மனம் அளிக்கிறது)
7. நெல்லி முள்ளி                    -  1/2 கப்
 ( கூந்தலுக்கு பளபளப்பு, வளர்ச்சியும் அளிக்கிறது )
8.வெந்தயம் - 100 கிராம்
( உஷ்ணத்தை  தடுத்து முடி கொட்டுவதைத் தடுக்கிறது)
9.அரைத்து உலர்ந்த்திய சந்தனம் - 5 கிராம்
 ( வியர்வை நாற்றத்தைப்  போக்குகிறது)
10. நன்னாரி வேர் - 25 கிராம்
 ( நறுமணம் கொண்ட் நன்னாரி குளிர்ச்சியுட்டுகிறது)
11. எலுமிச்சை தோல் - 10 மூடி
 (கேசத்தை பட்டுப் போல் மிருதுவாக்குவதுடன்  ஓர் இனிய மணத்தை ஏற்படுத்துகிறது)
12.ஆரஞ்சுப் பழத்தோல் - 4
13.கறிவேப்பிலை உலர்ந்தது - 1 கைப்பிடி (கேச வளர்ச்சிக்கு உதவுகிறது)
14.துளசி இலை - 1 கைப்பிடி உலர்ந்த்து ( பேன் வராமல் தடுக்கிறது)
15.பூந்திப் கொட்டை எனப்படும்  பொன்னாங்கொட்டை - 10
 ( உலர்ந்த உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்து விட்டு தோலை சீயக்காயுடன் போடவும்)
16.மஞ்சள் கரிசிலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி உலர்ந்த்து
 ( பொடுகை எதிர்த்து,கேச வளர்ச்சிக்கு உதவுகிறது)
17.பொடுதலை சமூலம் உலர்ந்தது - 5கிராம்
18. அடுக்கு செம்பருத்திப்பூ உலர்ந்தது - 6
( கேசவளர்ச்சிக்கும்,பாதுகாப்புக்கும்  ஏற்றது)
19.வெட்டி வேர்  - 25 கிராம்
(கேசத்தை சிறந்தமுறையில் கண்டிஷன் செய்கிறது)
20.அருகம்புல் - 1 கைப்பிடி ( அலம்பி உலர்ந்திய்து )
21.பூலாங்கிழங்கு - 50 கிராம்
22.பச்சரிசி - 1/4 கிலோ
இவற்றை வெய்யில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைக்கவும்.






Wednesday, 11 July 2012

ஆப்பம்



தேவையானவை;-
புழுங்கல்அரிசி         -2கப்
பச்சரிசி                        -2கப்
உளுத்தம்பருப்பு      -1/4கப்
சர்க்கரை                     -1/2கப்(விருப்பட்டால்)
தேங்காய்துருவல்  -1/2கப்
சமையல்சோடா     -1சிட்டிகை
உப்பு-1/4டீஸ்பூன்

செய்முறை;-
                  புழுங்கல்அரிசி,பச்சரிசி,உளுத்தம்பருப்பு ஆகியவற்றை 4 மணி நேரம்         ஊற வைத்து வெண்ணெய் போல் அரைக்கவும. இதனை 8 மணி நேரம் புளிக்க விடவும்.  மறுநாள் இதில் சர்க்கரை, உப்பு, சமையல்சோடா, தேங்காய்துருவல் சேர்த்து கலந்து ஆப்பச்சட்டியில் ஆப்பம் ஊற்றவும்..

Monday, 9 July 2012

மைதா சீடை



தேவையான பொருட்கள:-


மைதா மாவு                          -1 கப்
அரிசி மாவு                             -1 கப்
நெய்                                         - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு                                       -1 டீஸ்பூன்
சீரகம்                                       - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல்            - 1/2 கப்
உப்பு                                         -  தேவையான அளவு
எண்ணெய்                            - பொரிப்பதற்க்கு தேவையான அளவு




செய்முறை:-மைதா மாவை தண்ணீர் படாமல் ஓர் உலர்ந்த துணியில் கொட்டிக் கட்டி, ஆவியில் வேக வைக்கவும். வெந்த மாவை ஆற வைத்து சலித்து கொள்ளவும். அரிசி மாவையும் சலிக்கவும். மிளகு,சீரகத்தை கரகரப்பாக பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் மாவுவகைகள், மிளகுசீரகப்பொடி, உருக்கியநெய்,தேங்காய் துருவல்,உப்பு     ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திமாவு பதத்திற்க்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து பொரித்து எடுக்கவும். சுவையான மைதா சீடை தயார்.