Monday, 25 February 2019

 திப்பிலி ரசம்

திப்பிலி இருமல், இரைப்பு, ஜலதோஷம், சளி, தலைவலி முதலியவற்றைப் போக்குவதுடன், வாதத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும் மிக்கது

தேவையானவை -

திப்பிலி -25 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 5 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 துண்டு
கடுகு - உருத்தம் பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
புளி - சிறிது
தக்காளிப் பழம்-2
பூண்டுப் பல்_6
நெய் - சிறிது

செய்முறை =

மிளகாய், தனியா, திப்பிலி, மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்து 4 டம்ளர்
தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும் வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் கடுக உளுத்தம்பருப்பு, தட்டிய பூண்டு, பெருங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொரித்து அதில் கொட்டவும்.புளியைக் கரைத்து வடிகட்டிச்சேர்க்கவும். 10 நிமிடம் கொதித்ததும் பருப்பை ஊற வைத்து அரைத்து கலக்கவும். நுரை கட்டியதும் இறக்கவும்.

Monday, 21 January 2019

திருக்கடிகை ஸ்ரீயோக நரசிம்ம ஸ்வாமிக்கு மங்களம்
மாமலையாம் திருக்கடிகையில் வாழ்பவரே உமக்கு மங்களம்
தேவர்களும் முனிவர்களும் வணங்கிடும் பெருமாளே உமக்கு மங்களம்
திருமகள் வாழ்கின்ற திருமார்புடைய ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம்
அரங்கத்தில் வாழும் அடியார்கள் தொழும் பெருமாளே உமக்கு மங்களம்

தீமைகளை அழித்து வேண்டும் வரம் அருளும் நரசிம்மா உமக்கு மங்களம் வைசாக முழுமதியில் ஸ்வாதி திருநாளில் அவதரித்த பெருமாளே உமக்கு மங்களம் அபயவரத ஹஸ்தங்களுடன் ஆனந்தம் அருளும் நரசிம்மா உனக்கு மங்களம் வாரணசி கயை, ப்ரயாகையிலும் புகழ் மிக்க் திருக்கடிகைப்பெருமாளே உமக்கு மங்களம் வானவரும மண்ணவரும போற்றிடும் அக்காரக்கனி ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம் சீர்மிகு சிறிய திருவடிக்கு ஸங்கம் சக்கரம் அருளிய பெருமாளே உமக்கு மங்களம் ஸ்ரீ அம்ருதபல வல்லி நாயகி ஸமதே ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம் மங்களம் மங்களம்